ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!
ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குல்பி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
கடந்த வியாழக்கிழமை மாலை ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் குல்பி விற்று வந்தார். அப்போது, குல்பி வாங்கி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதில், 15 குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று மருத்துவமனை சிகிச்சை முடிந்து 15 மாணவர்களும் வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், குல்பியின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.