மாட்ரிட் நகரில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்: பெண் கட்டிடக் கலைஞர் உட்பட 4 உயிரிழப்பு
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில்(Madrid) நடந்த கட்டிட விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கட்டிட விபத்து
மாட்ரிட் நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 30 வயதுடைய பெண் கட்டிட கலைஞர் மற்றும் 3 கட்டிட தொழிலாளர்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் புதன்கிழமை தீயணைப்பு படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிக கூடும் இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம், முன்பு அலுவலகமாக இருந்த நிலையில் தற்போது நான்கு நட்சத்திர ஹோட்டலாக மாற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
மேலும் இந்த சம்பவத்தில் 3 கட்டுமான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |