ஜேர்மன் பெண்ணை கரம்பிடித்த மதுரை இளைஞர்: தமிழ் முறைப்படி திருமணம்!
ஜேர்மன் பெண்ணிற்கும் தமிழக இளைஞருக்கும் திருமணம்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் காளிதாஸ் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ் ஜேர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு உடன் பணிபுரிந்து வரும் ஜேர்மனியை சேர்ந்த ஹானா பங்க்லோனாவை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம்- சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான கனேடிய காதலி...குத்திக் கொன்ற பிரித்தானிய இளைஞர்!
இதையடுத்து ராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.