அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதியினர்
மதுரையை சேர்ந்த தம்பதியினர் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
மதுரை தம்பதியினர்
தமிழக மாவட்டமான மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்ச்செல்வி. இவர்கள், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தங்களுடைய ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தம்பதியினர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நானும் எனது கணவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
சொந்த கிராமத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எனது கணவரின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இதை கல்வி வழியில் கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். இதை பார்த்து பலரும் செய்வார்கள். இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். எனது கணவர் செய்யும் செயலுக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |