அமெரிக்காவுடன் மோத தயாராகும் நாடு... மக்களை ஆயுதம் ஏந்தச் சொல்லும் ஜனாதிபதி
அமெரிக்காவின் அருகிலுள்ள வெனிசுவேலா நாடு, அமெரிக்காவுடன் மோத தயாராகிவருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
அமெரிக்காவுடன் மோத தயாராகும் நாடு
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்குமிடையே பதற்றம் நீடிக்கும் நிலையில், வெனிசுவேலா ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோ, தன் நாட்டைக் காக்க மக்களை ஆயுதம் எடுக்கக் கோரியுள்ள விடயம் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. .
மதுரோ, தன் நாட்டைக் காக்க, 2.5 மில்லியன் ராணுவ வீரர்களை திரட்டிவருவதாக அறிவித்துள்ளார்.
போதைப்பொருட்கள் கொண்டு செல்லும் கப்பல்கள் எனக் கூறி வெனிசுவேலாவுக்கு சொந்தமான மூன்று கப்பல்களை தாக்கி அழிக்கும் வீடியோக்களை சமூக ஊடகம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் பகிர்ந்திருந்தார்.
அத்துடன், அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு மேலாக பறக்கும் வெனிசுவேலா நாட்டு ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தப்போவதாக மிரட்டியுள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்கா எட்டு போர்க்கப்பல்களை கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிக்கு அனுப்ப, வெனிசுவேலா தன் பங்குக்கு தன் நாட்டு கப்பல்களை தயாராக நிறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மதுரோ, கொலம்பியாவுடனான எல்லை அருகே ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |