நாங்கள் நலமாக இருக்கிறோம்…!புரூக்ளின் சிறையில் இருந்து மதுரோ வெளியிட்ட செய்தி
நியூயார்க் சிறையில் நலமாக இருப்பதாக சிறைப்பிடிக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க் சிறையில் மதுரோ
அமெரிக்க ராணுவ படைகள் வெனிசுலா நாட்டு தலைநகர் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தினர்.
அத்துடன் கடந்த வாரம் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

விசாரணைக்கு பிறகு மீண்டும் ஜனாதிபதி மதுரோ சிறையில் அடைக்கப்பட்டி இருந்தாலும் மன உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரோவின் மகன் வெளியிட்ட வீடியோ
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா தனது பெற்றோரின் நிலை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தாங்கள் நலமாக இருப்பதாகவும், நாங்கள் சோர்வடையாத போராட்டக்காரர்கள் என்றும் சிறையில் இருந்து மதுரோ செய்தி அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்பு சிறையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா புளோரஸ் இருவரும் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் மார்ச் 17ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |