மகளிர் உரிமை தொகை: இந்த மாதம் ரூ.1000 முன்கூட்டியே வரப்போவது ஏன்?
தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே பயனர்களின் கணக்கிற்கு வரவு வைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகை
மாதந்தோறும் கலைஞர் மகளிர் தொகை திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் 15ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மாதம்தோறும் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால் முன்கூட்டியே 14ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்கள் மேல்முறையீடு மேற்கொண்டு அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |