பேருந்தில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக வீசியெறிந்த இளம்பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், இளம்பெண்ணொருவர் பேருந்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், குழந்தையை பேருந்தின் ஜன்னல் வழியாக வீசி எறிந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் குழந்தை பெற்ற பெண்
நேற்று செவ்வாயன்று, இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள Parbhani என்னுமிடத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார் கர்ப்பிணியான ரித்திகா (Ritika Dhere, 19) என்னும் பெண்.
அவருடன், அவரது கணவர் என கூறப்படும் அல்த்தாஃப் (Altaf Shaikh) என்பவரும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அதிகாலை 6.30 மணியளவில் ரித்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பேருந்திலேயே அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அவர்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்
ஆனால், அடுத்து நடந்த விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆம், தான் பெற்ற குழந்தையை, ஒரு துணியில் சுற்றி பேருந்திலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார் ரித்திகா. அதற்கு அவரது கணவரும் உடந்தை என கூறப்படுகிறது.
பேருந்திலிருந்து ஏதோ தூக்கியெறியப்படுவதைக் கவனித்த வழிப்போக்கர் ஒருவர், அது என்ன என பார்க்க, அது ஒரு குழந்தை என தெரியவந்ததும் பொலிசாரை அழைத்துள்ளார்.
குழந்தை பேருந்திலிருந்து வீசியெறியப்பட்டதை அறிந்துகொண்ட பொலிசார், அந்த பேருந்தை துரத்தி நிறுத்தியுள்ளார்கள்.
துயரம் என்னவென்றால், தூக்கியெறியப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டது.
ரித்திகாவும் அல்த்தாஃபும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களால் அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்பதாலேயே அதை தூக்கி வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் இருவரும் கணவன் மனைவி என கூறினாலும், அதை நிரூபிக்க அவர்களிடன் எந்த ஆவணமும் இல்லை.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ரித்திகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |