உணவுப்பொருட்களின் வாங்க பணமின்றி பசியால் தவிக்கும் காபூல் மக்கள்! வெளிச்சத்திற்கு வந்த அவலம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி மக்கள் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷர்ப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேற ஒரே வழி காபூல் விமான நிலையம் என்பதால், தலைநகரில் கடந்த 9 நாட்களாக பதட்டம் நீடித்து வருகிறது.
அதேசமயம், தலிபான்களால் கைப்பற்றப்பட்டு 9 நாட்கள் ஆகியும் இன்னும் காபூலில் வங்கிகள், பள்ளிகள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கிகள்-ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதால் காபூலில் பெரும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வங்கிகள்-ஏடிஎம்கள் வேலை செய்யாததால் பல குடியிருப்பாளர்கள் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகள் பட மடங்கு உயர்ந்துள்ளன.
எங்களிடம் பணம் இல்லை. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது என்று காபூல் வாசி வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆப்கானை விட்டு கடைசி அமெரிக்க இராணுவ வீரர் வெளியேறிய பிறகு தான் புதிய அரசாங்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளது.
ஆப்கானில் உள்ள வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியே ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலிபான்கள் காலக்கெடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.