ஐரோப்பிய தீவு ஒன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... சுனாமி அச்சத்தில் மக்கள்
கிரேக்கத்தில் 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் அதிர்வுகள் துருக்கி மற்றும் இஸ்ரேல் முழுவதும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி தாக்கக்கூடும்
பிரித்தானிய மக்களுக்கு மிகவும் பிடித்தமான விடுமுறை தீவுகளான கிரீட் மற்றும் சாண்டோரினியை இந்த நிலநடுக்கத்தை அடுத்து பெரிய சுனாமி தாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நிலநடுக்கம் மற்றும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து தொடர்ந்து மதிப்பிடுவதால், மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கிரேக்க அரசாங்கம் தேசிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கிரீட் முழுவதும் சாலைகள் மற்றும் பழைய கட்டிடங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நிலநடுக்கமானது ஹெராக்லியன் நகரிலிருந்து 79 கி.மீ தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 6:19 மணிக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் மேலும் ஐந்து பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அச்சம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் வெளியேற உள்ளூர் நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டன.
சுமார் 100 நிலநடுக்கங்கள்
கிரீட் மற்றும் ரோட்ஸ் ஆகிய இரு தீவுகளிலும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
கிரீட் தீவில் 624,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், தீவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு தலைநகரான ஹெராக்லியோனில் வசிக்கின்றனர். இந்தப் பகுதி ஐரோப்பாவில் மிகவும் நில அதிர்வு மிகுந்த மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது, இங்கு ஆப்பிரிக்க மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கின்றன.
6.0 க்கு மேல் ஏற்படும் எந்தவொரு நிலநடுக்கமும் மக்கள் வசிக்கும் பகுதியைத் தாக்கினால் சேதத்தை ஏற்படுத்தும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 6.1 முதல் 6.9 வரையிலான அளவுகளில் சுமார் 100 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |