கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தோசை தயாரித்த பிரியங்கா காந்தி!
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தோசை தயாரித்தார்.
தோசை தயாரித்த பிரியங்கா காந்தி
கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று தனது தேர்தல் பிரச்சார பயணத்தின் போது கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைலாரி ஹோட்டலில் தோசை தயாரித்தார்.
இதனையடுத்து, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நெகிழ்ச்சிப் பதிவு
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், இன்று காலை பழம்பெரும் மயால்ரி ஹோட்டல் உரிமையாளர்களுடன் தோசைகள் செய்து மகிழ்ந்தேன்....நேர்மையான, கடின உழைப்பு மற்றும் நிறுவனத்திற்கு என்ன ஒரு சிறந்த உதாரணம். உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி. தோசைகளும் சுவையாக இருந்தன... என் மகளை மைசூருக்கு அழைத்து வந்து சாப்பிட காத்திருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்சன்கள் நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Enjoyed making dosas with the legendary Myalri Hotel owners this morning….what a shining example of honest, hard work and enterprise.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 26, 2023
Thank you for your gracious hospitality.
The dosas were delicious too…can’t wait to bring my daughter to Mysuru to try them. pic.twitter.com/S260BMEHY7