நாய்க்குட்டி கடத்திய இந்திய வம்சாவளியினருக்கு சிறை: கடன் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல்
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாய்க்குட்டி கடத்திய இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடன் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல்
இந்திய வம்சாவளி மலேசியரான மஹேந்திரன் கணேசன் (43) என்பவர், தனது வாகனத்தில் துணிகளுக்கிடையில் வைத்து மறைத்து நாய்க்குட்டி ஒன்றை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கொண்டுவந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
அவருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனையும், 2,500 சிங்கப்பூர் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், கணேசன் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த நபர், கணேசன் தன் கடனை அடைப்பதற்காக, நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக்குட்டிகளை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்திவரவேண்டும் என கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு முறை செல்லப்பிராணிகளை கடத்திவரும்போதும் 60 டொலர்கள் கணேசனுக்கு தருவதாக கூறியிருக்கிறார் அந்த நபர்.
ஆனால், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லப்பிராணிகளை கொண்டுவர முறைப்படி அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
ஆக, கடனை அடைப்பதற்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கணேசன்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |