மலேசியா பிரதமர் நாளை எடுக்கவிருக்கும் முக்கிய முடிவு! கசிந்த தகவல்
மலேசிய பிரதமர் Muhyiddin Yassin நாளை (திங்கட்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்வுள்ளதாக அமைச்சரை மேற்கோள் காட்டி MalaysiaKini செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
Yassin திங்களன்று மன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பார் என்று பிரதமர் துறையின் அமைச்சர் Mohd Redzuan Md Yusof கூறியதாக MalaysiaKini செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
எனினும், இது தொடர்பில் மலேசிய பிரதமர் அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான Yassin மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டது, எனவே தனது ராஜினாமா முடிவை கட்சி உறுப்பினர்களிடம் அறிவித்தார்.
நாளை, ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அதன் பிறகு, அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க அரண்மனை செல்கிறார் என்று Mohd Redzuan Md Yusof கூறினார் என MalaysiaKini தெரிவித்துள்ளது.
2020 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று Muhyiddin Yassin பிரதமரானார்.
இந்நிலயைில், ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் UMNO கட்சியின் சில உறுப்பினர் ஆதரவை வாபஸ் பெற்றனர்.
பிரதமர் பதவி விலக வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில், செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக Muhyiddin Yassin கூறினார்.
ஆனால் வெள்ளிக்கிழமை, Yassin முதல் முறையாக தனக்கு பெரும்பான்மை இல்லை என்று ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நாளை Yassin பதிவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.