ரொட்டி செய்ய தெரிந்தால் வாயைப் பிளக்க வைக்கும் ஊதியம்: எங்கே தெரியுமா?
மலேசியாவில் ரொட்டி செய்பவர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், அதற்காக ஒரு அகாடமி திறக்க வேண்டும் என ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் யோசனை கூறியுள்ளார்.
மலேசியாவில் அரிசி உணவுகளே பிரதான உணவு. இவையே அனைவராலும் விரும்பப்பட்ட வந்த நிலையில் தற்போது ரொட்டியும் மலேசிய மக்களால் விரும்பப்பட்ட வருகிறது. மேலும் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பவருக்கு மாதம் 5,032 Ringgits வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு மலேசியாவில் தட்டுப்பாடு நிலவுவதால், கமருல் என்ற நபர் தானே தனது உணவகத்தில் ரொட்டி செய்வதாகவும், சாதாரண நாள்களில் 500 ரொட்டிகளும், விடுமுறை நாள்களில் 700 முதல் 800 ரொட்டிகளும் விற்பனையாகிறது. மேலும் இந்த ரொட்டி விற்பனை அதிக லாபம் தருவதால்,அதற்காக ஒரு அகாடமி திறக்கலாம் என கருமல் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இந்த யோசனைக்கு, மக்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் சிலர் வணிக வளர்ச்சியைத் தொடர இது ஒரு பயனுள்ள யோசனையாக இருக்கும் எனவும் தெரிவித்துவருகின்றனர்.