கொரோனாவால் அதிக தற்கொலைகளை சந்தித்து வரும் பிரபல நாடு! அரசுக்கு எச்சரிக்கை தகவல்
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை அதிகரித்துள்ளது.
உலகையே கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக,பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் ஏற்பட்ட மன நெருக்கடி காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், கொரோனாவால் மலேசியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 468 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டில் மலேசியாவில் 609 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் 63 பேர் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் மன நலத்தைக் காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.