மலேசியாவில் நுழைய 10 இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு - என்ன காரணம்?
விசா இல்லா நுழைவு இருந்தும் 10 இந்தியர்கள் மலேசியாவில் நுழைய அனுமதி மறுக்கபட்டுள்ளது.
இந்தியர்கள் நுழைய அனுமதி மறுப்பு
சமூக வருகை அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துவது, மனித கடத்தல் ஆகியவற்றை தடுக்க, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம்(AKPS) அதிக ஆபத்துள்ள விமானங்களை குறிவைத்து சிறப்பு சோதனையை நடத்தியுள்ளது.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் 7 மணி நேரத்திற்கு மேலாக, 400க்கும் மேற்பட்ட பயணிகளிடம் இந்த பாரிய சோதனை நடைபெற்றுள்ளது.
இதில், 99 வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. 99 பயணிகளில், 10 பேர் இந்தியர்கள், 80 பேர் வங்கதேசத்தினர் மற்றும் 9 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவார்கள். 99 பேரும் ஆண்கள் ஆகும்.
என்ன காரணம்?
சந்தேகத்திற்கிடமான வருகை மற்றும் பயணப் பதிவுகள் உள்ளிட்ட குடியேற்ற சோதனைகளை அவர்கள் நிறைவேற்றத் தவறியதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு, பின்னணி சோதனை, பயண ஆவணங்களின் சரிபார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் என கூடுதல் ஆவணச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை டிசம்பர் 31, 2026 வரை மலேசியா நீட்டித்துள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொள்கையின் கீழ், இந்திய பயணிகள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |