மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா! அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல்
மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது.
மலேசியாவை பொறுத்தவரை கடந்த வருடம் முதலே கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக தாக்கி வருகிறது அப்போது முதல் தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டாலும், தொற்று நெருக்கடியை மசாளிக்க முடியவில்லை.
அத்துடன் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை வைத்தபடியே இருந்தன. இப்படிப்பட்ட சூழல்தான், அந்த நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டங்களை கடந்த திகதி திரும்பப் பெற்றுவிட்டதாக அரசாங்கம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, அவசரநிலை சட்டங்களை திரும்ப பெறுவதற்கு, மலேசிய மாமன்னரின் ஒப்புதல் ரொம்ப முக்கியம். ஆனால், அதை பெற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், தன்னுடைய ஒப்புதல் இன்றி அரசு செயல்பட்டு விட்டதாகவும் மாமன்னரே அந்த சமயத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இங்குதான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது, அரசுக்கும் அரண்மனைக்கும் கருத்து வேறுபாடு முற்றியது. அதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு பதவி விலக வேண்டும் என்று அடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
ஏனெனில் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியதுமே, யாசின் அரசு தன்னுடைய பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. இவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சி எம்பிக்கள் 15 பேர் திரும்ப பெற்றனர்.
இந்த நிலையில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். யாசின் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் பதவிக்கு வந்தார்,
தற்போது அவர் ராஜினிமா செய்துவிட்டாலும் புதிய பிரதமர் பதவியேற்கும் வரை அரசு பராமரிப்பாளராக இருப்பார் என அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.