15 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்! இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரபலம்: ஒரு கும்பலே சிக்கியதன் பின்னணி
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், மாலத்தீவு மாஜி அமைச்சர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருக்கும் தலைநகர் கொழும்பு பொலிசாருக்கு கடந்த 7-ஆம் திகதி ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில், 15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஒருவரை பொலிசார் கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், 15 வயது சிறுமியை பெரிய கும்பலே பாலியல் பலாத்காரம் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதில், மாலத்தீவு முன்னாள் நிதி அமைச்சர் முகமது அஷ்மலி உள்பட 32 பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது அம்பலமானதால், இது தொடர்பாக, அஷ்மலி, உள்ளூர் அரசியல்வாதிகள், கப்பல் தலைமை அதிகாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது முகமது அஷ்மலி, மசாஜ் செய்யவே இணையதளம் மூலம் தொடர்பு கொண்டதாகவும், வேறு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இவர்கள் அனைவரையும் வரும் 16-ஆம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தவிட்டது.
சிறுமியை பாலியலுக்கு தொழிலுக்கு விற்க விளம்பரம் செய்த இணையதள நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.