செஸ் போட்டிக்கு புர்கா அணிந்து வந்த பெண்., சந்தேகமடைந்த அமைப்பாளர்கள்., தெரியவந்த உண்மை
கென்யாவில் பெண்களுக்கான செஸ் போட்டிக்கு ஆடவர் ஒருவர் புர்கா அணிந்துவந்து கலந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கென்யாவைச் சேர்ந்த 25 வயது இளைஞர், பெண்களுக்கான ஓப்பன் செஸ் போட்டியில் கலந்துகொண்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளார். ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட ஸ்டான்லி ஓமண்டி (Stanley Omondi), தான் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார், மேலும் பணத்தேவைக்காக இவ்வாறு செய்ய தூண்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி ஓமண்டி புர்கா அணிந்தது மட்டுமின்றி, ஒரு மூக்குக் கண்ணாடியும் அணிந்து தனது அடையாளத்தை ரகசியமாக வைத்திருந்தார். அவர், தன்னை Millicent Awour என்ற பெயரில் பதிவு செய்து கொண்டார். ஆனால், போட்டி அமைப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரது முகத்திரை கிழிக்கப்பட்டது.
Chess.com
ஆரம்பத்தில் தலையிட தயங்கிய அமைப்பாளர்கள் நான்காவது சுற்றுக்குப் பிறகு சந்தானத்தின் பெயரில் அவரை விசாரிக்க முடிவு செய்தனர். அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று அடையாளம் கேட்க, இறுதியில் தான் நிதி நெருக்கடியில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
"நிதித் தேவைகள் காரணமாக இவ்வாறு செய்துவிட்டேன், ஆனால் எனது செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், மேலும் அனைத்து விளைவுகளையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் ஒரு கடிதத்தில் எழுதினார்.
Chess.com
சர்வதேச கிளாசிக்கல் செஸ்ஸில் மதிப்பீட்டை 1500-க்கு அருகிலும், பிளிட்ஸ் செஸ் மதிப்பீட்டை 1750-க்கு அருகிலும் கொண்டுள்ள ஸ்டான்லி ஓமண்டி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
அவர் இந்த போட்டியில் எடுத்த புள்ளிகள் தலைகீழாக மாற்றப்பட்டு எதிராளிகளுக்கு வழங்கப்பட்டதாக Chess.com தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற கென்யா ஓபன், கென்யா தலைநகர் நைரோபியில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டியாகும். இந்த ஆண்டு 22 நாடுகளிலிருந்து 400 வீரர்கள் கலந்துகொண்டனர்.