வன்முறை களமாகிய மைதானம்! மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா மைதானத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டத்திற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கால்பந்து வீரர் மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்டார்.
லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
கொல்கத்தாவில் காணொளி மூலம் தனது உருவச் சிலையை திறந்து வைத்த அவர், மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆனால், சில நிமிடங்களிலேயே அவர் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து சூறையாடினர்.
முதல்வர் மன்னிப்பு
இதனால் பொலிஸார் தடியடி நடத்த அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் பலரும் மெஸ்ஸியை காண முடியாத வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிர்வாகக் குறைபாடு இருந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதாகவும் கூறி மெஸ்ஸியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |