சில நாட்களில் திருமணம்..புதுமாப்பிளைக்கு நேர்ந்த பரிதாபம்..கதறும் காதலி
தமிழக மாவட்டம் ராணிபேட்டையில் திருமணத்திற்கு சில நாட்கள் உள்ள நிலையில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிச்சயம்
ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவஞ்சிப்பட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வரும்போது பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் இருவர் குடும்பத்தினருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அவர்களை சமாதானப்படுத்திய காதலர்கள், தங்கள் திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்து 26ஆம் திகதி திருமணம் என முடிவானது. இந்த நிலையில் காதலியின் வீட்டிற்கு சென்ற மோகன்ராஜ், அவரிடம் அளவு மேலாடை வாங்கிக்கொண்டு ராணிப்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.
சாலை விபத்து
அப்போது அடையாளம் தெரிய முதியவர் சாலையில் இறந்து கிடந்ததால் அங்கே கூட்டம் கூடியிருந்தது. அந்த வழியாக வந்த லொறி ஒன்று, கூட்டத்தைப் பார்த்ததும் திடீரென நின்றது.
இதனால் லொறியின் பின்னால் வந்துகொண்டிருந்த மோகன்ராஜ் வாகனத்தின் மீது பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கதறும் குடும்பம்
இதனையடுத்து இருவரது சடலங்களையும் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மோகன்ராஜின் குடும்பத்திற்கும், அவரது காதலியின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையில் இதுகுறித்துவ வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய லொறி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.