அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல்: சமீபத்திய தகவல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வாக்கிங் சென்ற சீக்கியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல்
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஹர்பால் சிங் (70) என்னும் நபருக்கும் மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரும் ஒருவரையொருவர் தாக்கத் துவங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட சிங் கீழே விழுந்த நிலையிலும் தாக்குதல்தாரி அவரை தொடர்ந்து தாக்கியதாகவும், அக்கம்பக்கத்திருந்தவர்கள் அவரைப் பார்த்து சத்தமிடவே, அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஆகத்து மாதம் 4ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்ட சிங்குக்கு தலை மற்றும் முகத்தில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தகவல்கள்
இந்நிலையில், சிங்கைத் தாக்கிய நபர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது பெயர், போ ரிச்சர்ட் (Bo Richard Vitagliano, 44).
சம்பவம் நடந்த பகுதியிலிருந்த CCTV கமெராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ரிச்சர்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிச்சர்ட், வீடற்றவர் என்றும், ஏற்கனவே தாக்குதல், போதைப்பயன்பாடு முதலான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னணி கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |