மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது
மாஸ்கோவில் ரஷ்யாவின் மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட நபர், துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக FSB பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
இராணுவ உளவுத்துறையின் முதல் துணைத் தலைவர்
ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறையின் முதல் துணைத் தலைவராக பணியாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸியேவ் (Vladimir Alexeyev), மாஸ்கோவில் உள்ள ஒரு குடியிருப்பில் வெள்ளிக்கிழமையன்று பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது 60 வயதான நபர் ஒருவர் என்று சந்தேகிக்கப்பட்டது. மேலும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றதாக தெரிய வந்தது.
இந்த நிலையில் அந்நபர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக FSB பாதுகாப்பு சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆனது டிசம்பர் முதல், மாஸ்கோவிலோ அல்லது அதன் அருகிலோ 3 ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கொலை அரங்கேறியது. இவற்றைத் தொடர்ந்துதான் விளாடிமிர் அலெக்ஸியேவ் மீதான வெளிப்படையான படுகொலை முயற்சி, ரஷ்யாவிற்குள் மூத்த இராணுவ அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தொடர் தாக்குதல்களில் சமீபத்திய ஒன்றாகும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளை தடம் புரள செய்யும் முயற்சியாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிதான் அவர் (விளாடிமிர் அலெக்ஸியேவ்) மீதான தாக்குதலை அரங்கேற்றினார்" என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டிற்கு உக்ரைன் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |