அமெரிக்காவில் இந்தியரின் தலையை வெட்டிய புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்
அமெரிக்காவில், இந்தியர் ஒருவர், அவரிடம் வேலை செய்யும் ஊழியர் ஒருவரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்தியர் ஒருவருக்கு நிகழ்ந்த பயங்கரம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டாலஸ் நகரில் மோட்டல் ஒன்றை நடத்திவருகிறது இந்தியரான சந்திர நாக மல்லையா (Chandra Nagamallaiah) என்பவரது குடும்பம்.
புதன்கிழமை, நாக மல்லையாவுக்கும் கோபோஸ் மார்ட்டினெஸ் (Cobos Martinez) என்னும் அவரிடம் வேலை செய்யும் ஊழியருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பழுதான வாஷின் மெஷின் ஒன்றை பயன்படுத்தவேண்டாம் என நாக மல்லையா கோபோஸிடம் கூறினாராம்.
ஆனால், நேரடியாக கோபோஸிடம், பேசாமல், மற்றொரு பெண் ஊழியரை அழைத்து அவரிடம் அந்த வாஷிங் மெஷின் குறித்து சொல்லி, அதை கோபோஸுக்கு மொழி பெயர்க்கச் சொன்னாராம் நாக மல்லையா.
தன்னிடம் நேரடியாக பேசாமல் மற்றொருவரிடம் சொல்லி அதை மொழிபெயர்க்கச் சொன்னதால் ஆத்திரமடைந்த கோபோஸ், பட்டாக்கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு நாக மல்லையாவைத் துரத்தியுள்ளார்.
நாக மல்லையாவின் மனைவியும் 18 வயது மகனும் கோபோஸை தடுக்க முயன்றும் கேட்காமல், தப்பி ஓட முயன்ற நாக மல்லையாவை பல முறை தாக்கி, அவரது தலையை வெட்டியுள்ளார் கோபோஸ்.
அவர் நாக மல்லையாவின் தலையை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், பின் அந்த தலையை கையில் எடுத்துக்கொண்டு குப்பைத்தொட்டியை நோக்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்று திகிலை உருவாக்கியுள்ளன.
நாடுகடத்தும் நடவடிக்கைகள்
இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கோபோஸை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
நாகமல்லையாவை கொடூரமாக கொலை செய்த கோபோஸ் கியூபா நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஆவார்.
பல வழக்குகளில் தொடர்புடைய கோபோஸை முந்தைய ஜோ பைடன் அரசு நாட்டுக்குள் நடமாட அனுமதிக்காமல் இருந்திருந்தால், ஒரு அப்பாவியின் கொலை தடுக்கப்பட்டிருக்கும் என்கிறார் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை துணைச் செயலரான Tricia McLaughli.
மேலும், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கன்னா என்பவரும், இந்தோ அமெரிக்க புலம்பெயர்ந்தோரான ஒருவர், அவரது மனைவி மற்றும் மகன் கண்முன் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட விடயம் கொடூரமானது என்று சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார்.
The brutal beheading of a hardworking Indian American immigrant in front of his wife & son is horrific. The murderer had multiple prior arrests for violent theft & child endangerment & was undocumented. He should not have been free on American streets. https://t.co/7LDNITCd9Y
— Ro Khanna (@RoKhanna) September 12, 2025
அத்துடன், ஏற்கனவே பல குற்றங்கள் செய்துள்ள கோபோஸ் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடாது, அவர் அமெரிக்க தெருக்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |