தாக்குதல் நடத்தியவர் இலங்கையர்! இது தான் உண்மை... செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் மற்றும் பொலிஸ் கமிஷ்னர்
நியூசிலாந்தில் நடந்த இலங்கையர் நடத்திய தாக்குதல் குறித்து நாட்டின் பிரதமர் மற்றும் பொலிஸ் கமிஷ்னர் முழு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown Lynnmall சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சமப்வ இடத்திலே சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நாட்டின் பிரதமர் Jacinda Ardern செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இது நியூசிலாந்துக்கு தெரிந்த அச்சுறுத்தல். கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நியூசிலாந்திற்குள் அந்த இலங்கை குடிமகன் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
அதன் பின் அவர் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டார். வன்முறை எண்ணங்களை கொண்டிருந்தார். ஆனால் அவரை சட்டப்ப்படி சிறையில் அடைக்க முடியவில்லை என்று கூறினார்.
மேலும், பொலிஸ் கமிஷ்னர் Andrew Coster, குறித்த நபர் கடுமையான கண்காணிப்பில் இருந்தார். இவர் Glen Eden-லில் இருந்து New Lynn வரை வந்த போது, கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக உற்று நோக்கியே இருந்தது.
இதன் காரணமாகவே, உடனே பொலிசார் அங்கு செல்ல முடிந்தது. பெரிய அசம்பாவிதத்தை தடுக்க முடிந்தது.
நீங்கள் ஒருவரை 24 மணி நேரத்திற்கும் மேல் கண்காணிக்கும் போது, அவருக்கு அருகேவே அதாவது நெருக்கமாகவே இருக்க முடியாது, தூரத்தில் இருந்து தான் கண்காணிக்க முடியும், அது தான் உண்மை என்று கூறினார்.