கழிப்பறையில் அமர்ந்திருந்த நபர்! அடிப்பகுதியில் ஏதோ கடிப்பதாக ஏற்பட்ட உணர்வு… குனிந்து பார்க்கையில் காத்திருந்த அதிர்ச்சி
ஆஸ்திரியாவில் இளைஞன் ஒருவர் வளர்த்து வந்த மலைப்பாம்பு வடிகால் வழியாக பக்கத்து வீட்டு கழிப்பறைக்குள் நுழைந்த நிலையில் அதன் காரணமாக அதில் உட்கார்ந்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் 11 விஷமில்லாத பாம்புகளை வீட்டில் வைத்திருக்கிறார்.
அதில் 1.6- மீட்டர் கொண்ட ஒரு மலைபாம்பு அங்கிருந்து தப்பி வடிகால் வழியாக பக்கத்து வீட்டு கழிப்பறை குழிக்குள் புகுந்தது.
அந்த சமயம் பார்த்து அங்கு வந்த 65 வயதான நபர் கழிப்பறையில் உட்கார்ந்தார். அப்போது அவர் மர்ம உறுப்பில் எதோ கடிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அப்போது அவர் பார்க்கையில் கழிப்பறை கிண்ணத்தில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பாம்பு பிடிப்பதில் கில்லாடியான வெர்னர் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வெர்னர் பாம்பை பிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவத்தில் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனிடையில் பாம்பை வைத்திருந்த இளைஞரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.