வெறும் 5 டொலருக்கு Google-ஐ சொந்தமாக்கிய இளைஞர்!
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் கூகுள் டொமைனை நபர் ஒருவர் வெறும் 5 டொலருக்கு வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Nicolas Kuroña என்ற நபரே google.com.ar என்ற டொமைனை வாங்கியுள்ளார்.
இதை அவரே ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த டொமைன் விற்பனைக்கு இருந்தது, அதை சட்டப்பூர்வமாக வாங்கிவிட்டேன் என Nicolas Kuroña ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
MercoPress படி, Nicolas Kuroña 5.80 டொலருக்கு அந்த டொமைனை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
அர்ஜென்டினா அதிகாரிகள் google.com.ar-யின் உரிமையை புதுப்பிக்க மறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Esto es lo que vi el día que compre el dominio de https://t.co/cK20BdyuxB, gracias por el apoyo !! pic.twitter.com/hYsVcEoLLj
— Nicolas David Kuroña (@Argentop) April 23, 2021
எவ்வாறாயினும், அதிகாரிகள் உடனடியாக google.com.ar என்ற டொமைனை Nicolas Kuroña-விடமிரு்நது மீட்டெடுத்ததாக MercoPress செய்தி வெளியிட்டுள்ளது.