காதுகள் அறுபட்டு... சிதைக்கப்பட்ட நிலையில் இரு சிறார்களின் உடல்: கைதான நபரின் பகீர் வாக்குமூலம்
கென்யாவில் சிறார்கள் இருவரை கடத்தி கொலை செய்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் அளித்த வாக்குமூலம், மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
தலைநகர் நைரோபி அருகாமையில் பள்ளி ஒன்றில் இருந்து இரு சிறார்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையில் 20 வயதான Masten Milimu Wanjala என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.
கைதான இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் நாட்டை உலுக்கிய தகவல் வெளியானது. இதுவரை அந்த இளைஞர் நண்பர்கள் உட்பட 12 சிறார்களை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதில் இரு சிறார்களில் உடல் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. 12 மற்றும் 13 வயதுடைய அந்த சிறார்களின் காதுகள் அறுக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
ஒரு சடலம் ஆற்றோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய சடலங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறார்களை குறித்த இளைஞர் ஏன் கொலை செய்துள்ளார் என்பது தொடர்பில் தெளிவான பதில் இல்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், மந்திரவாத சடங்குகளுக்காக சிறார்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.