28 ஆண்டுகளுக்கு பின் அப்படியே கிடைத்த தந்தையின் உடல்! நிம்மதியடைந்த குடும்பம்
பாகிஸ்தானில் உருகும் பனிப்பாறையில் சிக்கியவரின் உடல் 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது.
கோஹிஸ்தான்
பாகிஸ்தான் 13,000க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளைக் கொண்டுள்ளது. இது பூமியில் வேறு எங்கும் துருவங்களுக்கு வெளியே இல்லாத அளவிற்கு அதிகமாகும்.
இமாலயமலையின் வெளிப்புறப் பகுதிகள் நீண்டுள்ள கோஹிஸ்தான் என்ற ஒரு மலைப்பிரதேசம் இதற்கு சான்றாகும். இங்கு காலநிலை மாற்றத்தால் உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதனால் பனிப்பாறைகள் விரைவாக உருகி வருகின்றன.
இந்த நிலையில்தான் 28 ஆண்டுகளு முன் காணாமல்போன ஒருவரின் உடல், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் இப்பகுதியில் கிடைத்துள்ளது.
லேடி மெடோஸ் பனிப்பாறையின் விளிம்பிற்கு அருகில் உள்ளூர்வாசிகள் அந்நபரின் உடலை அடையாளம் கண்டுள்ளனர்.
1997ஆம் ஆண்டில் காணாமல்போனவர்
கடந்த 1997ஆம் ஆண்டில் நசிருதீன் என்பவர், 31 வயதாக இருந்தபோது தனது சகோதரருடன் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர் காணாமல்போக சகோதரர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்.
திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான நசிருதீனை தேட அவர்களது குடும்பத்தினர் முயற்சிகள் எடுக்கவில்லை.
எனினும் அவரது உறவினர்கள் பலமுறை பனிப்பாறைக்கு சென்று முயற்சித்தும் அவரது உடலை மீட்டெடுக்க முடியாமல் போயுள்ளது.
இந்த சூழலில்தான் நசிருதீனின் உடல், கடந்த மாதம் 31ஆம் திகதி உள்ளூர் மேய்ப்பரால் பனிப்பாறையில் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டது.
நசிருதீனின் உடல் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டதில் தங்களுக்கு நிம்மதி கிடைத்ததாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |