இளநீர் குடித்ததால் பறிபோன முதியவரின் உயிர்! டென்மார்க்கில் நடந்த சோகம்

Denmark Coconut price
By Thiru Apr 04, 2025 10:00 PM GMT
Report

குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத இளநீர் குடித்த 69 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் நடந்த சோகம்

டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது நபர் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் கெட்டுப்போன இளநீரை குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குடித்த இளநீர் துர்நாற்றம் வீசியதுடன், தேங்காயின் உட்புறம் வழுவழுப்புடனும், அழுகிய நிலையிலும் இருந்துள்ளது.

இளநீர் குடித்ததால் பறிபோன முதியவரின் உயிர்! டென்மார்க்கில் நடந்த சோகம் | Man Dies After Drinking Rotten Coconut Water

காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

உடலில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான விளைவுகள்

இளநீரை குடித்த சில மணி நேரங்களிலேயே அந்த நபருக்கு அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.

அத்துடன் அவரது உடல்நிலை மிக மோசமாகி, குழப்பம், உடல் சமநிலை இழப்பு மற்றும் தோல் வெளிறியது ஆகியவை தோன்றியதோடு மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மூளையில் கடுமையான வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

வளர்சிதை மாற்ற என்செபலோபதி காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், மருத்துவமனையில் சேர்ந்த 26 மணி நேரத்திற்குள் அவர் மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

2021ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், "எமர்ஜிங் இன்ஃபெக்சியஸ் டிசீசஸ்" என்ற மருத்துவ இதழில் வெளியானதை அடுத்து தெரியவந்துள்ளது.

இளநீர் குடித்ததால் பறிபோன முதியவரின் உயிர்! டென்மார்க்கில் நடந்த சோகம் | Man Dies After Drinking Rotten Coconut Water

அந்த தேங்காய் ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கப்பட்டு, சமையலறை மேசையில் அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உயிரிழந்த நபர் தேங்காயிலிருந்து நேரடியாக உறிஞ்சு குழாய் மூலம் சிறிதளவு இளநீரை மட்டுமே குடித்துள்ளார். அப்போதே அதன் விரும்பத்தகாத சுவையை உணர்ந்த அவர் தேங்காயைத் திறந்ததும் உட்புறம் வழுவழுப்புடனும், அழுகிய நிலையிலும் இருந்ததை அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இளநீரை எவ்வாறு சேமிப்பது? நிபுணர் ஆலோசனை

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் சௌத்ரி கூறுகையில், "திறக்கப்பட்ட தேங்காய்களை (வெள்ளை சதைப்பகுதி வெளியே தெரிந்தால்) கட்டாயம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

அவற்றின் ஆயுட்காலம் மிகக் குறைவு. முழுமையாக மூடப்பட்ட தேங்காய்களை அறை வெப்பநிலையில் சில மாதங்கள் வரை வைக்கலாம்." என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US