ஓணம் கொண்டாட்டத்தில் நடனமாடியவர் மயங்கி விழுந்து மரணம்! கேரளாவில் சோக சம்பவம்
கேரளாவில் சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மேடை நடனம்
கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் ஜூனேஷ் அப்துல்லா. இவர் கேரள சட்டமன்ற நூலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தில் ஓணம் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மேடை நடனம் இடம்பெற்றிருந்தது.
இதில் 45 வயதான ஜூனேஷ் அப்துல்லாவும் ஒருவராக சேர்ந்து நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்த ஜூனேஷ் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அறியப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |