பிரான்சில் பயங்கரம்! நிஞ்சா உடையில் வந்த நபர் பெண் காவலர்கள் மீது வெறிச்செயல்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நிஞ்ஜா உடையில் பாரிய வாளுடன் வந்த ஒரு நபர், இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய அந்த நபர் பிரெஞ்சு காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
வியாழனன்று Cherbourg நகரின் வடமேற்கு பிரான்சில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் மாலை 3:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவர் ஒரு வாகனத்தைத் திருடி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு இரண்டு பெண் பொலிஸார் வந்துள்ளனர்.
இரு அதிகாரிகளும் தாக்குதல்தாரியை அணுகியபோது, அவர்கள் இருவரும் அவர் வைத்திருந்த நிஞ்சா வாளால் தாக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்திலும் மற்றொருவருக்கு கன்னத்திலும் காயம் ஏற்பட்டது.
Image: Twitter @InfosFrancaises
பாரம்பரிய ஜப்பானிய நிஞ்ஜா போராளிகளின் பாணியில் கருப்பு நிற உடையணிந்த அந்த நபர், அதிகாரிகளால் மூன்று முறை சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரெஞ்சு உள்துறை மந்திரி Gérard Darmanin பொலிஸ் படைக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
செர்போர்க்கின் மேயர் Benoît Arrivé, காவல்துறையின் பணிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.