ஏரிக்குள் பாய்ந்த கார்... பெண் பலி: ஆண் நண்பர் மீது கொலைக்குற்றச்சாட்டு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் கார் ஒன்று ஏரிக்குள் பாய்ந்த விபத்தில் ஒரு பெண் பலியானார்.
அவருடன் பயணித்த ஆண் மட்டும் பத்திரமாக நீந்திக் கரை சேர்ந்துள்ள நிலையில், அவர் தன் மகளைக் கொன்றுவிட்டதாக உயிரிழந்த பெண்ணின் தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.
ஏரிக்குள் பாய்ந்த கார்...
செவ்வாய்க்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 19ஆம் திகதி, பெங்களூருவிலுள்ள ஹசன் என்னுமிடத்தில், ரவி மற்றும் ஷ்வேதா என்னும் இரண்டு நண்பர்கள் பயணித்த கார் ஒன்று ஏரி ஒன்றிற்குள் பாய்ந்துள்ளது.
காரில் பயணித்த ரவி பத்திரமாக நீந்திக் கரை சேர்ந்துவிட, ஷ்வேதா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
ஆனால், ரவி அவர் தன் மகளைக் கொன்றுவிட்டதாக உயிரிழந்த ஷ்வேதாவின் தாயான ஜோதி பொலிசில் புகாரளித்துள்ளார்.
#WATCH | Hassan, Karnataka | Hassan SP Mohammad Sujitha said, "A case of murder was registered in Arehalli Police Station on 20 August. As per the complaint given by Jyoti, mother of the deceased Shweta, Ravi killed Shweta when taking her back from Hassan towards Belur. Shweta… pic.twitter.com/2dZmfl1Cjo
— ANI (@ANI) August 23, 2025
ரவியும் ஷ்வேதாவும் வேலை பார்த்த இடத்தில் பழகி நண்பர்களாகியுள்ளார்கள். இருவரும் தத்தம் துணையைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள்.
ரவி, ஷ்வேதாவைப் பார்க்க அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்வாராம். அப்போது அவர் தன்னைக் காதலிக்குமாறு ஷ்வேதாவை வற்புறுத்திவந்ததாக ஷ்வேதாவின் தாய் தெரிவித்துள்ளார்.
ஷ்வேதா மறுத்ததால், இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், ஆகவே, அவரை ரவி ஏரிக்குள் தள்ளிக் கொன்றுவிட்டதாகவும் அவரது தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ரவி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |