ஒரு மணி நேரத்திற்கு ரூ.18,000 சம்பாதிக்கும் இந்திய இளைஞர் - என்ன வேலை தெரியுமா?
இன்றைய இளைஞர்கள் பலரும் நிரந்தரமாக பணியாற்றி வந்தாலும், தங்களது திறமையை வைத்து பகுதி நேரமாகவும் வருமானம் ஈட்டுகின்றனர்.
இந்நிலையில், 34 வயதான நபர் ஒருவர் freelancing மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.18,000 வருமானம் ஈட்டி வருகிறார்.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.18,000 ஊதியம்
பிரித்தானியாவில் வசித்து வரும் இந்தியரான உத்கர்ஷ் அமிதாப்(utkarsh amitabh), கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவதோடு, AI சகாப்தத்தில் சாதனையின் எதிர்காலம் குறித்த ஆராய்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI கூட்டாண்மை பிரிவில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
AI துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர், மைக்ரோ1 என்ற தளத்தில் ஏஐ மொடல்களை பயிற்றுவிக்கும் பணியை பிரீலான்ஸ் ஆக செய்து வருகிறார்.
இந்த பணிக்காக, இவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.18,000) வழங்கப்படுகிறது.
ஜனவரி முதல் இந்த பணியை செய்து வரும் இவர், திட்ட நிறைவு போனஸ் உட்பட இதுவரை ரூ.2.6 கோடி சம்பாதித்துள்ளார்.

விரிவான வணிக சிக்கல்களைக் கொண்ட மாதிரிகளைச் சோதிப்பது, AI எங்கு குழப்பமடைகிறது என்பதைக் கண்டறிவது மற்றும் கணினி மிகவும் துல்லியமாகக் கற்றுக்கொள்ளும் வகையில் குறிப்புகளை மறுவடிவமைப்பது ஆகிய செயல்கள் அவரது பணியில் அடங்கும்.
ஒவ்வொரு நாள் இரவும் அவரது ஒரு வயது மகள் தூங்கிய பிறகு, சுமார் 3.5 மணி நேரம் இந்த வேலையை செய்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "நீங்கள் விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இயந்திரம் கற்றுக்கொள்கிறது, ஆனால் நீங்களும் கற்றுக்கொள்கிறீர்கள். அதுதான் என்னை உற்சாகப்படுத்துகிறது.

எனவே இது ஒரு கூடுதல் வேலையாகத் தெரியவில்லை. ஆனால் வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட மணிநேரங்களில் எனது ஆர்வங்களை மேலும் மேம்படுத்த இதனை செய்கிறேன்.
எனக்கு பணம் இரண்டாம் பட்சமே, ஆனால் அறிவுசார் சீரமைப்பு மற்றும் திறமையான வேலைக்கு நியாயமான ஊதியம் மிக முக்கியமானது" என தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மைக்ரோ1(Micro1) தளம் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய AI நிறுவனங்களுக்கு AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதில், பணிபுரியும் 2 மில்லியனுக்கும் அதிகமான நிபுணர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் இந்த நிறுவனம் 500 மில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |