தற்கொலை செய்துகொள்வதற்காக 17ஆவது மாடியிலிருந்து குதித்த நபர்: கொலையாக முடிந்த கோரம்
தற்கொலை செய்வதற்காக 17ஆவது மாடியிலிருந்து குதித்த ஒருவர், ஐந்து மாத குழந்தையின் மீது விழுந்ததால் குழந்தையின் உயிரும் பறிபோனது.
ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்.
அப்போது அந்த பகுதியிலிருந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்காக 17ஆவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார்.
குழந்தையுடன் சென்ற அந்த பெண் சென்றுகொண்டிருந்த அதே இடத்தில் இந்த நபர் குதிக்க, துரதிர்ஷ்டவசமாக, அந்த ஐந்து மாதக் குழந்தை மீதே விழுந்திருக்கிறார் அவர்.
விழுந்த அந்த நபர் உடனடியாக உயிரிழக்க, அந்த பெண் பதறிப்போய் குழந்தையை தூக்கியிருக்கிறார்.
அதற்குள் அங்கு வந்த மருத்துவ உதவிக்குழுவினர், படுகாயமடைந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அலறிக்கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி கொடுத்து மயங்கச் செய்துவிட்டு, Ilya என்னும் அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே Ilyaவின் உயிர் பிரிந்துள்ளது.
தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த ஒருவர், ஒரு குழந்தையின் உயிரையும் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.