பிள்ளைகளின் கண்முன்னே காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தனது பிள்ளைகளின் கண்முன்னே, மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெடுஞ்சாலையில் நின்றிருந்த கார்
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மோனிகா குப்தா மற்றும் பிள்ளைகள் அன்ஷிகா (12), அதர்வா (6) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், Seur கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.
உடனே அருகில் சென்றபோது ராகுல் மிஸ்ரா தனது மனைவி மோனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
பொலிஸார் விசாரணை
அதுவும் குழந்தைகளின் கண் முன்னேயே காரில் வைத்து அவர் கொலை செய்துள்ளார். இதனால் பிள்ளைகளான அன்ஷிகா, அதர்வா பயத்தில் நடுங்கியிருந்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் அவரை கொலை செய்ததாக ராகுல் மிஸ்ரா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |