திருமணம் செய்யாமல் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதலியை கொலை செய்த காதலன்: உடந்தையாக இருந்த சகோதரி
டெல்லியில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த காதலியை, கொலை செய்து 12 கிமீ தொலைவில் வீசிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடல் மீட்பு
கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், டெல்லியின் காராவால் நகரிலுள்ள கிருஷ்ணா பள்ளிக்கு அருகே இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
@represental image
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால், அந்த உடல் ரோகினா நஸ் அகுஸ்மகி(25) என்ற பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள சிசிடிவி மூலம் ஒருவர், துணியில் சுற்றப்பற்ற உடலை சுமந்து செல்ல பெண் ஒருவர் பின்னால் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் வினித் பவார் மற்றும் அவரது சகோதரி பரூள் செளத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதலர்கள்
வினித் மற்றும் நஸ் இருவரும் நான்கு ஆண்டுகள் முன்பு காதலிக்க துவங்கியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை குற்றத்தில் வினித் மற்றும் அவரது தந்தை இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு 2019 ஆண்டு ஆயுட் கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@gettyimages
இந்த சமயத்தில் வினித்தின் காதலி நஸ் அவரது சகோதரி பரூள் உடன் தங்கியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் பரோலில் வெளியே வந்த வினித், நஸ்ஸின் தந்தையிடம் அவரது மகளை திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
கழுத்தை நெரித்துக் கொலை
இதனை தொடர்ந்து காதலர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனை கண்காணித்து வந்த வினித்தின் சகோதரி அவளது காதலியை உதறி விட்டுவிடு என வினித்திடம் கூறியுள்ளார்.
@getty images
பின்னர் வினித்தும் அவரது சகோதரியும் நஸ்ஸை கொல்ல தீர்மானிக்கிறார்கள். ஒரு நாள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டையில் வினித் நஸ்ஸின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் உடலை பைக்கில் வைத்து எடுத்து சென்று அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இறுதியில் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.