இறந்ததாக கூறப்பட்ட குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! கூறிய திடுக்கிடும் உண்மை
தண்டனையில் இருந்து தப்பிக்க இறந்ததாக நாடகமாடிய நபர் 4 ஆண்டுகளுக்கு பின் சரண்
தன் மகளுக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்
இந்திய மாநிலம் பீகாரில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இறந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக பாடசாலை ஆசிரியர் நிரஜ் மோடி மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் பொலிஸார் விசாரிக்க நிரஜ் மோடியை தேடியபோது, அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் அவரின் தந்தை ராஜா ராம் மோடி கூறியுள்ளார்.
மேலும் உடல் அடக்கம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோவை அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இறப்பு சான்றிதழையும் பெற்றுள்ளார். இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் வழக்கை முடித்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு இதில் சந்தேகம் இருந்தது. ராஜா ராம் மோடியின் நடத்தையில் வித்தியாசம் இருப்பதை அறிந்த அவர், நிரஜ் மோடியின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.
Representative image
அதில் நிரஜ் மோடி உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், பொலிஸாரிடம் தெரிவித்தார். ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாததால் அவரால் நிரூபிக்க முடியவில்லை. எனினும், குறித்த பெண்ணின் தீவிரத்தை உணர்ந்த பொலிஸார் நிரஜ் மோடியின் வீட்டை கண்காணிக்க தொடங்கினர்.
பின்னர் ராஜா ராம் மோடியை பொலிஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து பயந்துபோன நிரஜ் மோடி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Representative image
அவர் தனக்கு பதிலாக போலி உருவத்தை கொண்டு தந்தை இறுதிச்சடங்கு நடத்தியதாக கூறினார்.
அதன் பின்னர் நிரஜ் மோடி மற்றும் அவரது தந்தை ராஜா ராம் மோடி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.