ஒரே மேடையில் மூன்று பெண்களை மணந்த 42 வயதான நபர்! பங்கேற்ற 6 குழந்தைகள்.. புகைப்படங்கள்
இந்தியாவில் 42 வயதான நபர் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் முறைப்படி 42 வயது நபர் ஒருவர் தனது மூன்று லிவ் இன் பார்ட்னர்களை ஒரே விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
மூன்று பெண்களுடன் அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் இந்த திருமண சடங்குகளில் பங்கேற்றனர். மோரி பாலியா கிராமத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு, சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியது.
மணமகன் சர்பஞ்ச் மௌரியா கூறுகையில், போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நான்.
2003இல் எனது முதல் தாரத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகமலே என்னுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
கிராம மக்கள் கூறுகையில், மௌரியா நான்பாய், மேளா மற்றும் சக்ரி ஆகிய மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட விழா, பழங்குடியினரின் முறைப்படி மூன்று நாட்கள் நடந்தது என கூறியுள்ளனர்.