இளம்பெண் என நினைத்து 17 வயது திருநங்கையுடன் டேட்டிங் சென்ற இளைஞன்! உண்மை தெரிந்து செய்த வெறிச் செயல்
அமெரிக்காவில் பெண் என நினைத்து 17 வயதான திருநங்கையுடன் டேட்டிங் சென்ற இளைஞன் பின்னர் ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டனை சேர்ந்தவர் போக்டா நோ (27). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நிக்கி (17) என்ற திருநங்கையுடன் சமூகவலைதளம் மூலம் நட்பானார். அப்போது நிக்கி ஒரு பெண் என்றே நினைத்திருந்தார்.
பின்னர் அதே ஆண்டு ஜூன் 6ஆம் திகதி போக்டோவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக நிக்கி கூற இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது காரின் பின் இருக்கையில் பாலியல் உறவில் ஈடுபட்ட போதே நிக்கி ஒரு திருநங்கை என்பதை கண்டுபிடித்து போக்டோ அதிர்ச்சியடைந்தார்.
இதன் பிறகு, ஒரு திருநங்கையுடன் தான் தனிமையில் இருந்தேன் என்பதை குடும்பத்தார் அறிந்தால் அது எனக்கு பெரிய அவமானம் என கூறினார். இதையடுத்து நிக்கி - போக்டோ இடையே தகறாறு ஏற்பட துப்பாக்கியை எடுத்து நிக்கி அவரை சுட முயன்றார்.
அதற்குள், போக்டோ செல்போன் சார்ஜரை எடுத்து நிக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிசார் போக்டோவை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையில் நிக்கி மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர் தாயார் திருநங்கைகள் சமூகத்தினருடன் இணைந்து தொடர்ந்து போராடி வந்தார்.
இந்த நிலையில் கொலையாளி போக்டோ மீதான குற்றம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவருக்கான தண்டனை விபரம் செப்டம்பர் 9ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.