குற்றப்பின்னணி கொண்ட நபர்... காதலை முறித்துக்கொண்ட பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காதலருடனான உறவை முறித்துகொண்ட பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலை முறித்துக்கொண்டபெண்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த முதுகலை பயிலும் 21 வயது பெண்ணொருவருக்கு, சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இருவரும் காதலிக்கத் துவங்கிய நிலையில், கார்த்தி மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அந்தப் பெண்ணுக்குத் தெரியவரவே, அவருடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார் அந்தப் பெண்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள்களில் கோயம்புத்தூரிலுள்ள அந்தப் பெண் வீட்டுக்கு வந்த சிலர் அந்தப் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்கள்.
வீட்டின் முன்பகுதியில் தீ பரவத் துவங்க, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளார்கள்.
இது கார்த்தியின் செயலாகத்தான் இருக்கும் என கருதப்படும் நிலையில், பொலிசார் குண்டு வீசியவர்களை தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |