மூளை அறுவை சிகிச்சை போது கிட்டார் வாசித்த நோயாளி: மருத்துவர்கள் கூறும் காரணம்
மருத்துவர்கள் மூளைக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளி கிட்டார் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானியரின் பிரமிப்பூட்டும் செயல்
பிரித்தானியாவின் டெவோனை சேர்ந்த பால் வெல்ஷ்-டால்டன் என்ற 44 வயது நபர், சமையலறையில் திடீரென சரிந்து விழுந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஒலிகோடென்ட்ரோகிளியோமா(Oligodendroglioma) என்ற அரிய மூளைக் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மார்ச் 28ம் திகதி மூளைக் கட்டியை முடிந்தவரை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நடத்தினர்.
மேலும் பால் வெல்ஷ்-டால்டம்னின் இசை பிரியத்தை அறிந்து கொண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது அவரது இசை ஆர்வத்தையும் சேர்த்துக் கொண்டனர்.
அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசிப்பு
இதையடுத்து சுமார் 5 மணி நேரம் மூளைக் கட்டியை அகற்ற நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பால் வெல்ஷ்-டால்டன் கிட்டார் வாசித்து அனைவரையும் வியப்படைய வைத்தார்.
அறுவை சிகிச்சையின் போது Green Day, Tenacious D, Wonderwall ஆகிய பாடல்களை பால் வெல்ஷ்-டால்டன் தனது கிட்டாரில் வாசித்து அசத்தினார்.
இது மருத்துவ குழுவினரை பிரமிக்க வைத்ததுடன், அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக முடிய வழி அமைத்துள்ளது.
மூளை அறுவை சிகிச்சையின் போது இத்தகைய நடைமுறைகள் நோயாளியின் மன உறுதியை அதிகரிப்பதுடன், நோயாளியின் மோட்டார் செயல்பாடுகளை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் உதவுவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |