கடன் சுமையால் டிராக்டர் இல்லாமல் தானாகவே நிலத்தை உழுத முதியவர்.., அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்
டிராக்டர் அல்லது எருது இல்லாமல் தானாகவே நிலத்தை உழுத முதியவரின் விவாசாய கடனை அமைச்சர் அடைத்துள்ளார்.
அமைச்சரின் செயல்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.
ஆனால், இந்த நிலத்தை உழுவதற்கு இவரிடம் எருதோ அல்லது டிராக்டரோ இல்லை. அதற்கு ரூ.2500 வாடகை கேட்பதால் முதியவரும் அவரது மனைவியும் சேர்ந்து பல ஆண்டுகளாக மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த 5-ம் திகதி அன்று அம்பதாஸ் பவார் வீட்டிற்கு நேரில் சென்றார்.
அப்போது, பவார் பெயரில் இருந்த விவசாய கடன் ரூ.42,500-ஐ அமைச்சர் முழுமையாக செலுத்தினார். மேலும், அவருக்கு கடன் பாக்கி இல்லை என்ற சான்றிதழை உடனடியாக வழங்குமாறும் உத்தரவிட்டார்.
முன்னதாக, லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பானது பவருக்கு 2 மாடுகளை பரிசாக வழங்கியது. மேலும், தெலங்கானாவை சேர்ந்த அறக்கட்டளை பவாருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |