2025 -ல் நடக்கவிருக்கும் 5 பேரழிவுகள்.., Time Traveler எனக்கூறும் நபர் திகதியை குறிப்பிட்டு கணிப்பு
கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணிக்க முடியும் என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் கூறியுள்ளார்.
எல்விஸ் தாம்சன் கணிப்பு
நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும்.
காலப் பயணம் என்பது கடந்த காலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பயணிக்கும் திறனைக் குறிக்கிறது.
இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் தன்னை ஒரு 'காலப் பயணி' என்று கூறிக் கொள்கிறார்.
அதாவது அவர், தான் எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்ததாக கூறுகிறார். எல்விஸ் தாம்சன் (@elvis.thompson.927) என்ற இவர் , ஜனவரி 1-ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் 2025 ஆம் ஆண்டின் ஐந்து திகதியை குறிப்பிட்டு பயங்கரமான பேரழிவுகள் நடைபெறும் என்று கூறியுள்ளார். அதுவும் அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்காவில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 6
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஏப்ரல் 6-ம் திகதி அன்று மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி வீசி பேரழிவை ஏற்படுத்தும்.
மே 27
மே 27-ம் திகதி அன்று அமெரிக்காவில் உள்நாட்டு போர் வெடித்து டெக்சாஸ் பிரிவினை ஏற்படுத்தும். மேலும், அணு ஆயுதங்கள் தொடர்பான மோதலை தூண்டி அமெரிக்காவுக்கு அழிவு ஏற்படுத்தும்.
செப்டம்பர் 1
செப்டம்பர் 1-ம் திகதி அன்று சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசியின் வருகையை கூறியுள்ளார். அதாவது இந்த வேற்றுகிரகவாசி தங்களது பாதுகாப்புக்காக12,000 மனிதர்களை மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
செப்டம்பர் 19
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை செப்டம்பர் 19 -ம் திகதி அன்று பெரிய புயல் தாக்கி அழிவை ஏற்படுத்தும்.
நவம்பர் 3
பசிபிக் பெருங்கடலில் நவம்பர் 3-ம் திகதி அன்று செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் கண்டுபிடிக்கப்படும். இது நீலத் திமிங்கலத்தை விட ஆறு மடங்கு என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |