தன்னையே வாடகைக்கு விட்டு 69 லட்சம் சம்பாதிக்கும் 41 வயது நபர்
ஜப்பானில் நபர் ஒருவர் தன்னை தானே வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கிறார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்
ஜப்பானைச் சேர்ந்த 41 வயது நபரான ஷோஜி மோரிமோடோ தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால், 2018ஆம் ஆண்டில் அவர் சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஷோஜி எடுத்த வித்தியாசமான ஒரு முடிவு பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன், அவருக்கு லட்சக்கணக்கில் பணத்தையும் கொடுத்திருக்கிறது.
வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்
அதாவது ஷோஜி, தனிமையில் துணை இல்லாமல் தவிப்பவர்கள் தன்னை துணையாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
பல தம்பதிகளை கவலைக்குள்ளாகிய திருமண மண்டப மோசடி! தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் கைது
அவரை வாடகைக்கு எடுப்பவர்கள் அவருடன் உரையாடலாம், வீடியோ காலில் பேசலாம், வெளியில் அழைத்து செல்லலாம்.
இதற்காக ஷோஜி இந்திய மதிப்பில் 16,000 ரூபாய் பெறுகிறார். அதுவும் 3 மணிநேரம் அவருடன் செலவிடத்தான்.
தனக்கு 1000 அழைப்புகள் வரை வருவதாகவும், தன்னை தானே வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் ஊதியமாக பெறுவதாக மோரிமோடோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |