வெளிநாடு ஒன்றில் இமானுவல் மேக்ரானை நோக்கி சத்தமிட்டபடி ஓடிவந்த நபரால் பரபரப்பு
நெதர்லாந்து சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை நோக்கி ஓடிவந்த நபர் ஒருவர், பொலிசாரின் துரித நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மேக்ரானை நோக்கி சத்தமிட்டபடி ஓடிவந்த நபர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நெதர்லாந்துக்குச் சென்றுள்ள நிலையில், அவர் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஒருவர், நாங்கள் இங்கே இருக்கிறோம், நாங்கள் இங்கே இருக்கிறோம், என சத்தமிட்டபடி மேக்ரானை நோக்கி ஓடிவந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நெதர்லாந்து பொலிசார் அவரைத் தடுத்து நிறுத்தியதுடன், அவரைக் கைதும் செய்ததால் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டது.
யார் அவர்?
உண்மையில், இரண்டு பேர் மேக்ரானை நோக்கி ஓடிவந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள், பிரான்சில் ஓய்வு பெறும் வயதை மேக்ரான் அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் என கருதப்படுகிறது.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.