நடுவானில் உடைந்த ஜன்னல் விமானம்: வெளியே இழுக்கப்பட்ட சுற்றுலா பயணி: திக் திக் நிமிடங்கள்!
நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் அதிர்ஷடவசமாக பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல்
அயர்லாந்தின் ரயன்ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிரீஸ் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு பறந்து கொண்டிருந்தது.
அப்போது செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கையின் ஜன்னல் மீது ஏதோ வேகமாக மோதி ஜன்னல் கண்ணாடி உடைத்துள்ளது.
இதனால் விமானத்திற்குள் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பியா சுற்றுலா பயணி விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.

அவரின் தலை மற்றும் தோள்பட்டை ஆகியவை விமானத்திற்கு வெளியே கிட்டத்தட்ட வெளியே சென்று விட்ட நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் அவர் முழுமையாக வெளியே இழுத்து செல்ல முடியவில்லை.
மேலும் திடீரென எழுந்த பெரும் சத்தத்தை அடுத்து விழித்துக் கொண்ட சக பயணிகள், வெளியே இழுக்கப்பட்டு கொண்டிருந்த பயணியை பிடித்து விமானத்திற்குள் இழுத்தனர்.
இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதையடுத்து ரயன்ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் ஜன்னல் ஒன்று திடீரென கழன்று விழுந்ததால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதாக தெரிவித்துள்ளது.
விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியதாகவும், பயணிகள் முனையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரம் ஒன்றில் இருந்து பிரிந்த பாகம் ஒன்று ஜன்னலில் மோதியதால் அந்த ஜன்னல் உடைந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |