பார்த்துக்கொண்டே இருந்ததால் புகார் அளித்த சக பெண் ஊழியர்..அலுவலகத்திலேயே 5 முறை சுட்டுக்கொன்ற நபர்
அமெரிக்காவில் பணியின்போது நீண்ட நேரம் ஓய்வெடுத்த சக ஊழியரை நபர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 51 வயதான Travis Merrill என்ற நபர், சக பெண் பணியாளரான Tamhara Collazo துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவர் ஐந்து முறை வெறிபிடித்தது போல் அப்பெண்ணை சுட்டதால் Tamhara உயிரிழந்ததாக கூறப்படுகிறது. Lewisvilleயில் உள்ள அலுவலக அறையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் Travisஐ கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கொல்லப்பட்ட Tamhara தனது மேலதிகாரியிடம் Travis தன்னை கண்காணிப்பதாகவும், தொந்தரவு செய்வதாகவும் புகார் கூறியுள்ளார்.
சகாக்கள் முன்னிலையில்
அத்துடன் அப்பெண் அங்கீகரிக்கப்படாத பணிநேர இடைவெளிகளை எடுத்ததால் Travis விரக்தியடைந்துள்ளார். மேலும், Travis கவுன்சிலிங் சென்று வந்துவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக Tamhara மீது கோபம் கொண்ட Travis அவரை கொலை செய்ய முடிவு செய்து துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். பல சந்தர்ப்பங்களை தவிர்த்து சரியான நேரம் பார்த்து காத்திருந்த அவர், சக பணியாளர்கள் முன்னிலையில் Tamharaவை சுட்டுக்கொன்றுள்ளார்.
அப்பெண் தனக்கு ஏற்படுத்திய துன்பத்திற்காக அவர் அந்த வலியை உணர வேண்டும் என்று விரும்பியதாகவும், வேண்டுமென்றே சகாக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டினை நடத்த திட்டமிட்டதாகவும் Travis பொலிசாரிடம் தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        