பிரான்சில் 11 வயதுச் சிறுமியை சுட்டுக்கொன்ற நபர்: காரணம் வெளியானது
பிரான்சில் 11 வயது பிரித்தானியச் சிறுமி ஒருத்தி 71 வயது நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 வயதுச் சிறுமியை சுட்டுக்கொன்ற நபர்
பிரான்சின் பிரிட்டனியில் வாழ்ந்துவந்த Adrian (52), Rachael (49) தம்பதியருக்கு Solaine Thornton (11) மற்றும் Celeste என்னும் இரண்டு பிள்ளைகள்.
LBC
சனிக்கிழமையன்று, Adrian குடும்பம் தங்கள் தோட்டத்தில் உணவருந்த தயாராகிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வாழ்ந்துவந்த நெதர்லாந்து நாட்டவரான Dirk Raats (71) என்பவர், திடீரென வேலி வழியாக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து Solaine உயிரிழக்க, அவளது பெற்றோரும் படுகாயமடைந்துள்ளனர்.
Dirk Raats உடனே வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டாலும், பின்னர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டதன் காரணம்
இந்நிலையில், சிறு பிள்ளையை Dirk Raats எதனால் சுட்டுக்கொன்றார் என்னும் கேள்விக்கான விடை தெரியவந்துள்ளது.
The Independent
அதாவது, அந்த பிரித்தானியக் குடும்பம் நீண்ட காலமாக அந்த பகுதியில் வாழ்ந்துவருகிறதாம். அந்தக் குடும்பத்துக்கும், Dirk Raats இடையே இரண்டு பேரின் சொத்துக்கும் நடுவில் இருக்கும் ஒரு துண்டு நிலம் தொடர்பில் சண்டை இருந்துகொண்டே வந்ததாம். அத்துடன், Adrian குடும்பம், தங்கள் தோட்டத்திலும் வேலியிலும் இருத மரங்களை வெட்டி சீர் செய்துகொண்டேயிருந்ததால் தொடர்ந்து எழுந்த சத்தம் Dirk Raatsஐ எரிச்சலடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆக, அந்த பிரச்சினை காரணமாகத்தான் Dirk Raats பக்கத்து வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
என்றாலும், பொலிசார் என்ன நடந்தது என்பதை அறிய தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |