திடீரென வந்த தும்மல் - குடல் வெளியேறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் திடீரென தும்மியதால் குடல் வெளியேறியுள்ளது.
திடீரென வந்த தும்மல்
63 வயதான நபர் தனது குடும்பத்தாருடன் உணவகத்தில் காலை உணவு எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென தும்மியுள்ளார்.
உடனே அவருக்கு அடி வயிற்றில் வலி வந்துள்ளது. அடுத்த நிமிடங்களில் அவருடைய குடலும் வெளியேறி இருக்கிறது.
உடனே அவருடைய குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
குறித்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அவருடைய அடி வயிற்றில் அதாவது அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தில் தையல் போடப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் இருந்தே தையல் பிரிக்கப்பட்ட குடல் வெளியேறியுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட பின்னர், வெளியே வந்த குடல் மருத்துவர்களின் உதவியுடன் மீண்டும் உடலுடன் பொருத்தப்பட்டது.
மேலும் அவருடைய சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா எனவும் வைத்தியர்கள் பரிசோதித்துள்ளனர்.
அவருடைய உடல்நிலை தற்போது முன்னேறி வந்தாலும், தும்மியதால் குடல் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |